Home செய்திகள் உலக செய்திகள் சீனாவின் ஈரான் கொள்கையில் மாற்றம்?

சீனாவின் ஈரான் கொள்கையில் மாற்றம்?

பெய்ஜிங், செப். 5- சீனா, அமெரிக்காவுடன் இணைந்து ஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த முயற்சிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே கொள்கை ரீதியிலான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது.
சர்வதேச விவகாரங்களில் சீனாவை விமர்சிப்பவர்கள் இருக்கலாம். ஆனால், வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் நாடாக (ஈரான்) சீனா இல்லை. சீனா பொறுப்புணர்வுடன் செயல்பட தயாராக இருப்பதாகவே கருதப்படுகிறது. அதற்காக அமெரிக்காவின் ஒவ்வொரு கோரிக்கையையும் சீனா ஏற்று நடக்கிறது என்று அர்த்தமில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களாக அமெரிக்கா-ஈரான் மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி, சர்வதேசப் பொருளாதாரத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி தருவதற்காக வளைகுடா நாடுகள் மீது ஈரான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்துவதாக கூறப்படுவதால் பதற்றம் அதிகரிக்கிறது.