
சென்னை: ஆக. 12- செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இரட்டை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். செங்கடலின் பாப் எல் மந்தேப் நீரிணை பகுதியில், ஓமனின் சலாலா நகரிலிருந்து ஜிபூட்டி வழியாக வந்த எகிப்துக்கு நாட்டுக் சொந்தமான திகமா என்ற சரக்குக் கப்பல் மீது ஈரான் ஆதரவு ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தினர். முதலில் சரக்கு கப்பலானது நீரிணையை கடந்து செல்லும் போது ஏவுகணைகளை வீசி ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போதும் கடும் சேதம் ஏற்பட்டது. தாக்குதலில் சேதமடைந்த கப்பலில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்த போது இரண்டாவது முறையாக மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு முறை நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு கப்பல் ஊழியர்கள் மற்றும் இரண்டு மீட்புப் படை பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.













