Home மாவட்டங்கள் சென்னை சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு

சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு

சென்னை, அக். 7- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,09,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,710க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்டு வருகிறது.