
காத்மாண்டு, செப்டம்பர் 2-
நேபாளம் தற்போது வரலாறு காணாத இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டுள்ளது. பனிப்பாறை
உடைந்ததால் உருவான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அந்நாடு பெரும்துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தத் துயரத்திற்குப் பின்னணியில் உள்ள காரணங்களை
நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கானல் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.காற்று மாசினால் ஏற்படும் காலநிலை மாற்றமே இந்தப் பேரழிவிற்கு முக்கிய காரணம்என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்டை நாடுகளான இந்தியா மற்றும் சீனாவிற்கு அவர் விடுத்துள்ள செய்தி உலக
அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த நாடுகள் வெறும் நிவாரண உதவி
வழங்குவதை விட, இந்த காலநிலை இழப்பீட்டை வழங்க வேண்டும் என்பதே நேபாளத்தின்
வலுவான கோரிக்கையாக உள்ளது. இது ஏதோ வழக்கமான மனிதாபிமான அடிப்படையிலான நிவாரண
பணி என்றோ அல்லது தொண்டு என்றோ பார்க்கப்படக்கூடாது. மாறாக, உலகளாவிய பருவநிலை
மாற்றத்தால் நேபாளம் அனுபவிக்கும் இந்தத் துயரத்திற்கு கிடைக்க வேண்டிய நீதி
மற்றும் இழப்பீடு என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரும், நிலையான
வேலைவாய்ப்பு மையத்தின் தலைவருமான அமித் பசோம், இந்திய வேலைவாய்ப்புச்
சந்தையின் தற்போதைய நிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலையின்மை
விகிதம் குறைந்தாலும் அல்லது தொழிலாளர் பங்கேற்பு அதிகரித்தாலும்,
வேலைவாய்ப்புகளின் தன்மை ஆரோக்கியமான வளர்ச்சியைக் காட்டவில்லை என்று அவர்
குறிப்பிடுகிறார். மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக எத்தகைய வேலைகளையும்
செய்யும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் இதனால் சுயதொழில் அல்லது
விவசாயத் துறை சார்ந்த வேலைகளில் ஈடுபடும் நிலை அதிகரித்துள்ளது. குறிப்பாக,
முறைசாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது.














