Home மாவட்டங்கள் சென்னை டிடிகே சாலையில் போக்குவரத்து மாற்றம்

டிடிகே சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை, அக். 7-
சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகளுக்காக, டிடிகே சாலை மற்றும் ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதியில் அக். 8 முதல் 3 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அடையார் கேட் ஹோட்டல் மற்றும் அபிராமபுரம் 4-வது தெருவிலிருந்து டிடிகே சாலை வழியாக ஸ்ரீராம் நகர் வடக்கு தெருவுக்குச் செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, அந்த வாகனங்கள் டிடிகே சாலை 1-வது குறுக்குத் தெரு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.இதேபோல், ஸ்ரீராம் நகர் வடக்கு தெருவிலிருந்து டிடிகே சாலையை நோக்கி வரும் வாகனங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, வாகனங்கள் வடக்கு தெரு மற்றும் டிடிகே சாலை 1-வது குறுக்குத் தெரு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.