Home செய்திகள் உலக செய்திகள் ட்ரம்பின் போர் கருத்து அதிர்ச்சி

ட்ரம்பின் போர் கருத்து அதிர்ச்சி

வாஷிங்டன், செப். 1- அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் மீதான போரை “ஒரு சிறிய உல்லாசப் பயணம்” என்று கூறியதனால் மக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இது அவரது அதிபர் பதவிக்கு ஆபத்தை உருவாக்கியுள்ளது. ஈரானுடனான போரை அமெரிக்க மக்கள் தொடக்கத்திலிருந்தே ஆதரிக்கவில்லை. ஆரம்பத்தில் 40 சதவீதமாக இருந்த ஆதரவு பின்னர் 33 சதவீதமாகக் குறைந்தது. ட்ரம்ப், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைப்பேன் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், போர் காரணமாக விலைகள் அதிகரித்தன. அமெரிக்கா போரைத் தொடங்கிவிட்டது; ஆனால் அதை முடிப்பது எப்படி என்பது தெரியவில்லை. அமெரிக்கத் தாக்குதல்களுக்கு ஈரான் வலுவான பதிலடி கொடுத்ததால், அமெரிக்கா தாக்குதலின் தீவிரத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்த ட்ரம்ப், ஈரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி செறிவூட்டலுக்கு எதிரானதாக போரின் நோக்கத்தை விளக்கினாலும், மக்கள் அதை நம்பவில்லை. ஈரான், ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கச்சா எண்ணெய் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியது. ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர், எரிபொருள் விலை உயர்வு நவம்பர் இடைத்தேர்தலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கின்றனர்.