Home மாவட்டங்கள் சென்னை தங்கம் விலை இன்றும் சரிவு

தங்கம் விலை இன்றும் சரிவு

சென்னை: நவ. 21-
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.21) சில்லரை விற்பனைச் சந்தையில் மீண்டும் குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.45 குறைந்து ரூ.11,465 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.360 குறைந்து ரூ.91,720 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.92,080-க்கும், ஒரு கிராம் ரூ.11,510-க்கும் விற்பனையான நிலையில், இன்று மேலும் சவரனுக்கு ரூ.360 சரிந்துள்ளது.
கடந்த நவம்பர் 17-ஆம் தேதி சுமார் ஓராண்டுக்குப் பிறகு ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் இறங்கிய தங்கம் விலை, அதன் பின்னர் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.185 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.1,85,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.