Home மாவட்டங்கள் பெங்களூர் 2 குடும்பத்தினர் இடையே மோதல் துப்பாக்கி காட்டி மிரட்டிய வாலிபர் தப்பி ஓட்டம்

2 குடும்பத்தினர் இடையே மோதல் துப்பாக்கி காட்டி மிரட்டிய வாலிபர் தப்பி ஓட்டம்

பெங்களூரு, நவ. 21-
பெங்களூரு புட்டேனஹள்ளி விநாயகா நகரில் திருமண பேச்சுவார்த்தையின் போது 2 குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில், வாலிபர் ஒருவர் துப்பாக்கி காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புட்டேனஹள்ளி விநாயகா நகரில் இளம்பெண் ஒருவரின் திருமணம் தொடர்பாக 2 குடும்பத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஏதோ ஒரு விஷயத்திற்காக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கடுமையான மோதலாக மாறியது.நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, அங்கிருந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பெண் வீட்டாரை மிரட்டினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த உறவினர்கள், உடனடியாக அந்த வாலிபரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பறித்தனர். துப்பாக்கியைப் பறிகொடுத்தவுடன் அந்த வாலிபரும், அவருடைய நண்பர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் புட்டேனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வாலிபர் மற்றும் அவருடைய நண்பர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திருமண பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தகராறு துப்பாக்கி காட்டி மிரட்டும் அளவுக்குச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.