Home விளையாட்டு கொரியா பாட்​மிண்​டன்: அஷ்மிதா சாம்​பியன்

கொரியா பாட்​மிண்​டன்: அஷ்மிதா சாம்​பியன்

சியோல், ஆக. 10- கொரியா மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை அஷ்மிதா சாலிஹா சாம்​பியன் பட்​டம் வென்றுள்ளார். தென் கொரி​யா​விலுள்ள சியோல் நகரில் இந்த கொரியா மாஸ்​டர் பாட்​மிண்​டன் போட்டி நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர் இறு​திப் போட்​டி​யில் அஷ்மிதா சாலிஹா​வும், சீனா​வின் ஹான் கியான்​ஜி​யும் மோதினர். இதில் அஷ்மிதா சாலிஹா 14-21, 21-14, 21-14 என்ற புள்​ளி​கள் கணக்​கில் ஹான் கியான்​ஜியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டத்​தைக் கைப்​பற்​றி​னார். இதன்​மூலம் பிஎஃப்​டபிள்யூ உலக டூர் சூப்​பர் 300 போட்​டிகளில் பட்​டம் வென்ற 5-வது இந்​திய வீராங்​கனை என்ற பெரு​மையை அஷ்மிதா சாலிஹா தட்​டிச் சென்​றார். இதற்கு முன்​னர் இது​போன்ற போட்​டிகளில் இந்​தி​யா​வின் சாய்னா நெவால், பி.​வி.சிந்​து, தேவிகா சிஹாக், தன்வி சர்மா ஆகியோர் பட்​டம் வென்​றிருந்​தனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.