Home பக்தி தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா கோலாகலம்

தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா கோலாகலம்

தஞ்சை, ஜூன் 6- தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், தஞ்சையில் உள்ள 27 பெருமாள் கோயில்களில் இருந்தும், மாட்டுவண்டிகளில் கருட வாகனத்தில் பெருமாள்கள் வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களையும் பக்தர்கள் கும்மியடித்தும், கோலாட்டம் ஆடியும், பஜனை பாடல்களை பாடியும் வரவேற்று வணங்கினர். தஞ்சையில் வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று ஆண்டு தோறும் கருட சேவை நடைபெறும். 92ம் ஆண்டாக இன்று 27 கருட சேவை திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. வெண்ணாற்றங்கரை நீலமேக பெருமாள், மணிக்குன்ற பெருமாள், சிங்க பெருமாள் கோயில் உள்ளிட்ட தஞ்சை முழுவதிலுமுள்ள 27 பெருமாள் கோயில்களில் இருந்தும் 27 பெருமாள்களும் மாட்டு வண்டிகளில் கருட வாகனங்களில் புறப்பட்டு கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் இந்த கருடசேவையின் சிறப்பே பக்தர்கள், வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்களும் ஒவ்வொரு கோயிலாக சென்று அனைத்து பெருமாள்களையும் தரிசனம் செய்ய இயலாதவர்களும் தரிசனம் செய்வதற்க்காக பெருமாள்களே பக்தர்களை தேடி வருவதாக கூறப்படுகிறது