Home மாவட்டங்கள் பெங்களூர் தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்: ஜூன் 2 –
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
பயிர்க் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் எல்.பழனியப்பன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த பேரணியாகச் சென்றனர்.ஆனால், போலீஸார் அவர்களை தடுத்து கைது செய்ய முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, வல்லம் டிஎஸ்பி காயத்ரி, காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் ஒருமையில் பேசியதாக குற்றம்சாட்டி, அவர்களைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து,
அவர்களில் 5 பேரை ஆட்சியரிடம் மனு அளிக்க போலீஸார் அனுமதித்தனர். அதன்பின்னர், விவசாயிகள் ஆட்சியர் ஆர்.ரேவதியிடம் கோரிக்கை மனுக்களை அளித்ததுடன், ஒருமையில் பேசிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். முன்னதாக, குறைதீர் கூட்டத்தில் மனு வழங்க பச்சைத்துண்டு அணிந்து வந்தவர்களை போலீஸார் நிறுத்தி பச்சைத் துண்டுடன் ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்லக்கூடாது என கூறினர். இதையடுத்து, பலரும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.