Home செய்திகள் தேசிய செய்திகள் தினமும் ரூ.1000 கோடி இழப்பு சமாளிக்க முடியாமல் தடுமாறும் மத்திய அரசு

தினமும் ரூ.1000 கோடி இழப்பு சமாளிக்க முடியாமல் தடுமாறும் மத்திய அரசு

புதுடெல்லி, மே 12- ஈரான் போரால் உலகம் முழுவதும் எரிபொருள் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இல்லாமல் தொடர்வதற்காக அரசு எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) பெரும் இழப்பை ஏற்றுக்கொண்டுள்ளன. 5 மாநில தேர்தல் காரணமாக மத்திய அரச எரிபொருள் விலையை உயர்த்தாமல் இருந்தது, இதேவேளையில் கச்சா எண்ணெயிவ் 50 டாலருக்க குறைவாக இருந்த போதும் இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை கையைமீறி போயுள்ளது என்பது தான் உண்மை. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளபடி, மேற்கு ஆசிய போர் நெருக்கடி தொடங்கியதில் இருந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தினமும் சுமார் 1000 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த இழப்பு 2026-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 2 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வை உள்நாட்டு விலையில் பிரதிபலிக்காமல் இருக்க, இந்தியாவின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் லாபத்தை தியாகம் செய்து விலையை நிலையாக வைத்துள்ளன. இதனால் அவை தினமும் 1000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன. பொதுமக்களுக்கு அதிக விலை சுமையை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.