Home செய்திகள் தேசிய செய்திகள் நிதி ஆயோக் முழு நேர உறுப்பினர்களாக நியமனம்

நிதி ஆயோக் முழு நேர உறுப்பினர்களாக நியமனம்

புதுடெல்லி, மே 4- நிதி ஆயோக் அமைப்​பின் முழுநேர உறுப்பினர்களாக ஆர்​.​பாலசுப்​ரமணி​யம், ஜோரம் அனியா ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். நாட்​டின் முதன்மை கொள்கை ஆலோ​சனை அமைப்​பாக நிதி ஆயோக் விளங்​கு​கிறது. இதன் தலை​வ​ராக பிரதமர் இருக்​கிறார். இந்​நிலை​யில், கடந்த ஏப்​ரல் 24-ம் தேதி நிதி ஆயோக்கில், அசோக்குமார் லஹிரியை துணைத் தலை​வ​ராக​வும், ராஜீவ் கவு​பா, கே.​வி.​ராஜு, கோபர்​தன் தாஸ், அபய் கரந்​தி​கர் மற்​றும் எம். ஸ்ரீனி​வாஸ் ஆகியோரை முழு நேர உறுப்​பினர்​களாக​வும் பிரதமர் நியமித்​திருந்​தார். இந்​நிலை​யில், கல்​வி​யாளர்​கள் ஜோரம் அனியா மற்​றும் ஆர்.பாலசுப்​பிரமணி​யம் ஆகியோரை நிதி ஆயோக் அமைப்​பின் முழு நேர உறுப்​பினர்​களாக நியமிக்க பிரதமர் மோடி சனிக்​கிழமை ஒப்​புதல் அளித்​தார். இதன்​படி, முழுநேர உறுப்பினர்களின் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்​துள்​ளது. அருணாச்சல பிரதேசத்​தின் பழங்​குடி​யின சமூக​மான நிஷி சமூகத்​தில் இருந்து முனை​வர் பட்​டம் பெற்ற முதல் பெண்​மணி ஜோரம் அனி​யா. இலக்​கி​யம், கலாச்​சா​ரம் போன்றவற்றில் அனியா குறிப்​பிடத்​தக்க பங்​களிப்பை வழங்​கி​யுள்​ளார். மற்றொரு புதிய உறுப்​பின​ரான ஆர். பாலசுப்​பிரமணி​யம், ‘மிஷன் கர்​மயோகி’ திட்​டத்​தின் கீழ் உள்ள திறன் மேம்​பாட்டு ஆணை​யத்​தின் மனிதவள உறுப்​பின​ராக உள்​ளார். இவர் பல புத்தகங்​களை எழு​தி​யுள்​ளார். குறிப்​பாக, பிரதமரின் 50 ஆண்​டு​கால பொது​வாழ்வை மைய​மாகக் கொண்டு ‘Power Within: The Leadership Legacy Of Narendra Modi’ என்​ற தலைப்​பில்​ எழு​திய புத்தகம்​ 2024-ல்​ வெளி​யானது.