Home செய்திகள் தேசிய செய்திகள் நீட் வினாத்தாள் கசிந்தது எப்படி

நீட் வினாத்தாள் கசிந்தது எப்படி

ஜெய்ப்பூர்: மே 13-
ராஜஸ்​தானின் சிகார் பகு​தியை சேர்ந்த ஒரு மாணவர், கேரளா​வில் எம்​பிபிஎஸ் படித்து வரு​கிறார். கடந்த 1-ம் தேதி அவர் சிகாரில் உள்ள தனது உறவினருக்கு கையால் எழுதப்பட்ட மாதிரி வினாத்​தாளை அனுப்பி உள்​ளார். இந்த வினாத்​தாளை படித்​தால் நீட் தேர்​வில் அதிக மதிப்​பெண் பெறலாம் என்​றும் கூறி​யுள்​ளார்.
.கடந்த 8-ம் தேதி மத்​திய புல​னாய்வு அமைப்​பு​கள் மற்​றும் ராஜஸ்தான் போலீ​ஸார் இணைந்து விசா​ரணை நடத்​தினர். இதுதொடர்பாக சிகார், ஜுன்​ஜுனு மற்​றும் உத்​த​ராகண்ட் தலைநகர் டேராடூனை சேர்ந்த பலர் கைது செய்​யப்​பட்டு உள்ளனர். மேலும் பலரிடம் தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வருகிறது. ராஜஸ்தானின் சிகாரில் பரவிய அதே மாதிரி வினாத்தாள் மற்றொரு சமூக​விரோத கும்​பலுக்கும் கிடைத்திருக்கிறது.
அந்த கும்​பல் மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக் நகரில் அண்​மை​யில் கூடி சதித் திட்​டம் தீட்​டி​யிருக்​கிறது. இந்த கும்​பல் மூலம் மகாராஷ்டி​ரா, ஹரி​யா​னா, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, காஷ்மீர், ராஜஸ்​தான், பிஹார், டெல்லி உள்​ளிட்ட மாநிலங்​களில் நீட் மாதிரி வினாத்​தாள் விற்​பனை செய்​யப்​பட்டு உள்​ளது.2 முக்​கிய குற்​ற​வாளி​கள் கைது
இதுதொடர்​பாக ராஜஸ்​தான் போலீஸ் வட்டாரங்​கள் கூறிய​தாவது: ராஜஸ்​தானின் கோட்டா நகரம் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்​களின் தலைநக​ராக கருதப்​படு​கிறது.
இங்கு ஏராள​மான பயிற்சி மையங்​கள் செயல்​படு​கின்​றன. தற்போது கோட்டா நகருக்கு இணை​யாக ராஜஸ்​தானின் சிகார் நகரும் வளர்ந்து வரு​கிறது. இந்த நகரில் சுமார் 20-க்​கும் மேற்​பட்ட முன்​னணி நீட், ஜேஇஇ பயிற்சி மையங்​கள் செயல்​பட்டு வருகின்றன. வினாத்​தாள் கசிவு தொடர்​பாக சிகார் நகரில் ஆர்.கே.கன்​சல்​டன்சி என்ற நிறு​வனத்தை நடத்தி வந்த ராகேஷ், ஜெய்ப்​பூரை சேர்ந்த மணீஷ் யாதவ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்​ளனர்.