Home செய்திகள் தேசிய செய்திகள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மத போதகர் கைது

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மத போதகர் கைது

ஸ்ரீநகர்: ஜூலை 23-
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி​களுக்கு அடைக்​கலம் கொடுத்த மதபோதகரை காவல்​துறை கைது செய்துள்​ளது.
ஜம்​மு-​காஷ்மீரின் கிஷ்த்​வார் மாவட்​டம், கலாசோய் பகு​தி​யில் உள்ள உள்​ளூர் மசூ​தி​யின் மதபோதகர் முகமது ரஃபீக் நாயக். சிங்போரா த்வாதர் கிராமத்​தைச் சேர்ந்த இவர், சத்ரூ பகு​தி​யில் இயங்கி வந்த பாகிஸ்தான் தீவிர​வா​தி​களுக்​குத் தங்​குமிட​மும், அத்​தி​யா​வசிய உதவி​களை​யும் வழங்கி வந்​துள்​ளார்.
லஷ்கர்-இ -தொய்பா தீவிர​வாத அமைப்​பின் தலை​வன் சைஃபுல்​லா​வுக்கு உள்​ளூர் அளவில் முழு ஆதர​வளித்து வந்​தவர் நாயக். சைஃபுல்லா மற்​றும் அவனது கூட்​டாளி​கள் தங்​கு​வதற்​கும், உணவருந்​து​வதற்​கும், தேவை​யான பொருட்​களைப் பெறுவதற்கும் நாயக்கே முக்​கியக் காரண​மாக இருந்​துள்​ளார். மேலும் தீவிர​வா​தி​கள் சத்ரூ காட்​டுப் பகு​தி​யில் 2 ஆண்​டு​கள் வரை ஒளிந்திருக்க உதவி​யுள்​ளார். அவரை போலீ​ஸார் நேற்று கைது செய்தனர்.
இந்த ஆண்​டின் தொடக்​கத்​தில் பாது​காப்​புப் படை​யினர் நடத்​திய அதிரடித் தாக்​குதலில் சைஃபுல்​லா​வும் அவனது கூட்​டாளி​களும் சுட்​டுக்​கொல்​லப்​பட்ட நிலை​யில், நாயக் பின்​னணி​யில் இருந்து கொடுத்த உதவி​களால்​தான் அவர்​களால் இவ்​வளவு காலம் உயிருடன் இயங்க முடிந்​த​தாகப் புல​னாய்வு அமைப்​பு​கள் கூறியுள்​ளன.
சத்ரூ பகு​தி​யில் வெளி​நாட்​டுத் தீவிர​வா​தி​களுக்​குச் செய்​யப்​பட்ட உதவி​கள் குறித்​துப் போலீ​ஸார் நடத்தி வரும் விசா​ரணை​யின் தொடர்ச்​சி​யாகவே நாயக் தற்​போது கைது செய்​யப்​பட்​டுள்​ளார். மாவட்ட அளவில் எல்லை தாண்​டிய தீவிர​வாதத்​தின் ஆதர​வுக் கட்டமைப்பை முற்​றி​லு​மாகத் தகர்க்​கும் முயற்​சி​யில் இந்த நடவடிக்கை ஒரு முக்​கிய மைல்​கல்​லாகப் பார்க்​கப்​படு​கிறது.
முன்​ன​தாக, இதே வழக்​கில் தீவிர​வா​தி​களுக்​குத் தேவை​யான பொருட்​களை​யும் தகவல் தொடர்பு உதவி​களை​யும் வழங்கி வந்த மஷ்கூர் அகமது என்ற பள்ளி ஆசிரியர் மற்​றும் முனீர் அகமது ஆகிய இரு​வரைப் போலீ​ஸார் கைது செய்​திருந்​தனர்.
தற்​போது இந்த விசா​ரணை தீவிர​மாக நடை​பெற்று வரு​வதோடு, தீவிர​வா​தி​களுக்கு உடந்​தை​யாக இருக்​கும் மற்​றவர்​களை​யும் பிடித்​து, கிஷ்த்​வார் பகு​தி​யில் உள்ள தீவிர​வாத ஆதரவு அமைப்புகளை முழு​மை​யாக அழிக்​கப் போலீ​ஸார் நடவடிக்கை எடுத்து வரு​கின்​றனர்.