Home மாவட்டங்கள் பெங்களூர் பெலகாவி அருகே 14 தங்க நாணயங்கள் மீட்பு

பெலகாவி அருகே 14 தங்க நாணயங்கள் மீட்பு

பெலகாவி, செப். 6: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா இஞ்சலா கிராமத்தில், வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பி.சி.எம். விடுதிக்கு அருகே தொழிலாளர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழங்கால பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை ஆராய்ந்தபோது, அதில் 14 தங்க நாணயங்கள் இருந்தன. தொழிலாளர்கள் உடனடியாக மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவித்தனர். தங்க நாணயங்களை கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கிராம பஞ்சாயத்து அதிகாரி, தாசில்தாருக்கு தகவல் தெரிவித்து, தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து, நாணயங்களை கைப்பற்றி தொல்லியல் துறைக்கு ஒப்படைத்தார். தொல்லியல் துறையினர், இதை 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும், கங்கா ஆட்சி அல்லது விஜயநகர பேரரசு காலத்தில் பயன்பட்டதாக இருக்கக்கூடும் எனவும் தெரிவித்தனர். நாணயங்களில் யானையின் படங்கள் காணப்பட்டன, இது கங்கா ஆட்சியின் அரசுசின்னமாக இருந்ததால், கங்கா ஆட்சி காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் கூறினர். 14 தங்க நாணயங்களின் எடை 54.8 கிராம் ஆகும். இதன் மதிப்பு ரூ.82 லட்சம் என அதிகாரிகள் கூறினர்.