
புதுடெல்லி: செப். 12 –
பிரிக்ஸ் நாடுகளின் ஏற்றுமதி 2024-ம் ஆண்டில் ரூ.5.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் வர்த்தக மன்றம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: இதுவரை நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்றங்களிலேயே தற்போதைய மன்றம்தான் மிகப்பெரியது. உலகளாவிய மதிப்பு சங்கிலிகளைப் பாதிக்கும் விவகாரங்கள், விவசாயம் மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள், சேவை வர்த்தகம், பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள், டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து இந்த மன்றத்தில் விவாதிக்கப்பட்டன.
உலகளாவிய ஏற்றுமதியில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, தற்போது சுமார் 24 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் ஏற்றுமதி 2003-ம் ஆண்டில் சுமார் 900 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது ரூ.8,618 கோடிக்கு சமமாகும். அந்த நிலையில் இருந்து, 2024-ம் ஆண்டில் பிரிக்ஸ் நாடுகளின் ஏற்றுமதி 6 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இந்தத் தொகை ரூ.5.74 லட்சம் கோடிக்கு சமமாகும்.
பிரிக்ஸ் நாடுகளின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, அந்தக் கூட்டமைப்பின் சந்தை அளவையும் அதன் ஆற்றலையும் பிரதிபலிக்கிறது. உலகளாவிய ஏற்றுமதியில் பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு அதிகரித்திருப்பதும், 2003-ம் ஆண்டில் 900 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி 2024-ம் ஆண்டில் 6 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.















