Home செய்திகள் தேசிய செய்திகள் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை

திருவனந்தபுரம்: நவ. 25-
கேரளத்தில் சொத்து பிரிவினைக்குப் பிறகு பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்று முதல்-மந்திரி வி.டி.சதீசன் தெரிவித்தார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், பத்தனாபுரத்தில் உள்ள காந்தி பவனில் நடைபெற்ற ஆதரவற்ற முதியோர் இல்லத் திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது வி.டி.சதீசன் கூறியதாவது:
“கேரளத்தில் சொத்து பிரிவினைக்குப் பிறகு பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும். ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே, மூத்த குடிமக்கள் நலனுக்காக தனித்துறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆதரவற்ற பெற்றோருக்கு ஐக்கிய முன்னணி அரசு எப்போதும் ஆதரவாக இருக்கும்” என்றார்.