
சென்னை: ஆக. 11-
சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்ற இயக்கத்தை முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்; தொடர்ந்து மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர்
சென்னை மாநிலக் கல்லூரியில் முதல்வர் விஜய் தலைமையில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்- மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் விஜய்க்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.
அவரை பின்பற்றி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் போதைப் பொருள் விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப் பட்டது. அவர் போதைப்பொருட்கள் புழகத்தை தடுக்க சிறப்பாக பணி செய்த போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு பதக்கங்களை வழங்கினார். தமிழகம் முழுவதும் போலீசார் பறிமுதல் செய்த போதைப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கை முதல்வர் விஜய் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டது. செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, தஞ்சை ஆகிய பகுதிகளில் போதைப் பொருட்களை அழிக்கும் பணிகளை முதல்வர் விஜய் வீடியோ வாயிலாக பார்த்தார்.













