Home செய்திகள் தேசிய செய்திகள் மசாஜ் மையங்களில் விபசாரம்:29 பெண்கள் மீட்பு

மசாஜ் மையங்களில் விபசாரம்:29 பெண்கள் மீட்பு

புதுடெல்லி: நவ. 28-
டெல்லியில் மசாஜ் என்ற பெயரில் 4 இடங்களில் விபசாரம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், 29 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஸ்பா உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய டெல்லி பகுதியில் பல்வேறு இடங்களில் மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, பஹர்கஞ்ச், நபி கரீம், கரோல் பாக் உள்ளிட்ட 4 இடங்களில் செயல்பட்டு வந்த ஸ்பா மற்றும் மசாஜ் மையங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனைக்கு முன்பு, போலீசார் வாடிக்கையாளர்கள் போன்று அந்த மையங்களுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அங்கு விபசாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் கூறினர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், மசாஜ் என்ற பெயரில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் மையங்கள் தொடர்பான விவரங்கள் தெரியவந்தன.தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஸ்பா உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் அங்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் என 15 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 29 பெண்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.