
சென்னை: ஆக. 11-
மதுபான விற்பனையின்போது, மதுபானக் கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததும், போதிய அளவில் மறுசுழற்சி செய்யாததும், வனவிலங்குகள் மற்றும் பொது சுகாதாரத்துக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், சூழலியல் சீரழிவுக்கும் பெரும் காரணமாக அமைகிறது.
இந்த மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளை குறைக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான நடைமுறையை ஊக்குவிக்கவும் தகுந்த நிதி மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என தமிழக அரசு கருதியது.
அதன்படி, மதுபான விற்பனையின் மீது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை எனும் தீர்வையை விதிக்க அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தில் திருத்தம் செய்து, கடந்த வாரம் சட்டப்பேரவையில் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா நேற்று சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்டது.













