
மாட்ரிட், மே 1- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் கால் இறுதிப் போட்டியில் போட்டித் தரவரிசையில் 12-ம் இடத்தில் உள்ள காஸ் பர் ரூடும், பெல்ஜிய வீரர் அலெக்சாண்டர் பிளாக்ஸும் மோதினர்.
இந்தப் போட்டியில் அலெக்சாண்டர் பிளாக்ஸ் சிறப்பாக விளையாடி புள்ளிகளைக் குவித்தார்.
இறுதியில் பிளாக்ஸ் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் முன்னிலை வீரரான காஸ்பர் ரூட்டை தோல்வியுறச் செய்தார். இதன்மூலம் அலெக்சாண்டர் பிளாக்ஸ் அரை இறுதிக்கு முன்னேறினார்.





















