Home செய்திகள் தேசிய செய்திகள் முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

சென்னை: மே 13-
தேசிய நுகர்​வோர் கூட்​டமைப்பு தரவேண்​டிய ரூ.317 கோடி நிலு​வையை மத்​திய அரசிடம் இருந்து பெற்​றுத்தர விவ​சா​யிகள், முதல்​வர் விஜய்​யிடம் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.
இதுகுறித்​து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: முதல்​வர் விஜய்யை தலை​மைச் செயல​கத்​தில் தேசிய தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு விவ​சா​யிகள் சங்​கத்​தின் தலை​வர் பி. அய்​யாக்​கண்ணு மற்​றும் சங்க நிர்​வாகி​கள் சந்​தித்து வாழ்த்து தெரி​வித்​தனர்.அப்​போது, தேசிய நுகர்​வோர் கூட்​டுறவு கூட்​டமைப்பு தொடர்​பாக ரூ.317 கோடி நிலு​வைத் தொகை இருப்​ப​தாக​வும், அதனை மத்​திய அரசிடம் பேசி பெற்​றுத் தர நடவடிக்கை எடுக்​கு​மாறும் கோரி, முதல்​வரிடம் மனு அளித்​தனர்.இதனைத் தொடர்ந்​து, முதல்​வர் நிலு​வைத் தொகையை இரண்டு வாரங்​களுக்​குள் பெற்​றுத் தர தேவை​யான உடனடி நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளு​மாறு சம்​பந்​தப்​பட்ட அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.இந்த சந்​திப்​பின்​போது தேசிய தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு விவ​சா​யிகள் சங்​கத்​தின் நிர்​வாகி​கள் உடனிருந்​தனர் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.