Home செய்திகள் தேசிய செய்திகள் மோடிக்கு நெதன்யாகு அழைப்பு

மோடிக்கு நெதன்யாகு அழைப்பு

புதுடெல்லி: அக். 23-
அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள இஸ்​ரேல் சுதந்​திர தின விழா​வில் பங்​கேற்று தீபம் ஏற்ற வேண்​டும் என்று இந்​திய பிரதமர் நரேந்​திர மோடிக்கு, பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு அழைப்பு விடுத்​துள்​ளார். அதேபோல், இந்​திய பைலட் ஸ்​மித் மச்​சா​ரை​யும் கவுர​விக்​கும் வகை​யில் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.கடந்த செப்​டம்​பர் 30-ம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ஃபிளை துபாய் நிறு​வனத்​தின் விமானம் பயணிகளு​டன் புறப்​பட்​டது. இந்​திய பைலட் ஸ்​மித் மச்​சார், ஓமனைச் சேர்ந்த துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி ஆகியோர் விமானத்தை இயக்​கினர்.
நடுவானில் பறந்த போது துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி பின்​னால் இருந்து இந்​திய பைலட் மச்​சா​ரைத் திடீரென கோடாரியால் தாக்​கினார். இதில் நிலைகுலைந்த அவர் தரையில் ரத்த வெள்​ளத்​தில் சரிந்​தார்.
அவரது மண்டை ஓடு உடைந்​தது. உயிர் போகும் தரு​வாயிலும் இந்​திய பைலட் மச்​சார், துணை பைலட் உடன் துணிச்​சலாக போராடினார். மிகுந்த சிரமப்​பட்டு மச்சார் அறைக் கதவைத் திறந்​தார். அவரது சத்​தம் கேட்​டதும் பயணிகள் சிலர் விரைந்து சென்று துணை பைலட்டை மடக்​கிப் பிடித்​தனர்.
இதன் பின்​னர் விமானத்​தில் பயணம் செய்த பைலட்​டுகள் சிலர் மேற்​கொண்டு விமானத்தை இயக்கி சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலை​யத்​தில் பத்​திர​மாக தரையிறக்​கினர். இதற்​கிடை​யில், ரத்த வெள்​ளத்​தில் கிடந்த இந்​திய பைலட் மச்​சா​ருக்கு விமானத்​தில் பயணித்த பல் மருத்​து​வர் முதலுதவி சிகிச்சை அளித்து ரத்​தப் போக்கை கட்​டுப்​படுத்​தினார்.