
புதுடெல்லி: அக். 7-
25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். அப்போது எடுத்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.அதனுடன் வெளியிட்ட பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:“டில்லியில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலில் இன்று வழிபாடு மேற்கொண்டேன்.
நாடு முழுவதும் உள்ள எனது சக குடிமக்களின் மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்வாழ்வுக்காக ஸ்ரீ விநாயகப் பெருமானிடம் பிரார்த்தனை செய்தேன்.தடைகளை நீக்கும் அந்த இறைவனின் அருளால் அனைவருக்கும் நல்வாழ்வு கிடைக்கட்டும். மேலும், நமது நாடு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்கட்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி 25 ஆண்டுகால பொதுச்சேவையை நிறைவு செய்ததற்கு துணை ஜனாதிபதியும், மத்திய அமைச்சர்களும் சமூக வலைதளப் பதிவுகள் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளனர்.













