Home செய்திகள் தேசிய செய்திகள் விபத்து: 7 பேர் பலி

விபத்து: 7 பேர் பலி

அமராவதி: ஆக. 27:
ஆந்திராவில் ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டம், சிலகலூரிபேட்டையில் ஆட்டோ மீது தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. விஜயவாடாவில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற பஸ் ஆட்டோ மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.ஆட்டோவில் பயணித்த 15 பேரில் ஏழு பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் பாபு (62), மனேம்மா (55), சம்பூர்ணம்மா (70), லக்ஷ்மம்மா (75), கங்கம்மா (50), சுவர்தா (45), மரியம்மா (45) என அடையாளம் காணப்பட்டனர். மேலும், நான்கு குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பலத்த காயங்களுடன் தப்பினர். காயமடைந்த இவர்கள் குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டு, தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. இரவு பயணங்களால் அடுத்தடுத்து விபத்து நடக்கிறது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்து நடை பெறும். இந்த விபத்து இரவு 8 மணிக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.