Home செய்திகள் தேசிய செய்திகள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 30 இந்திய கப்பல்கள்

ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 30 இந்திய கப்பல்கள்

புதுடெல்லி: ஜூன் 25–-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சீரடைந்து வருகிறது. 30 இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடல் போக்குவரத்து மேம்பட்டு வரும் நிலையில், இந்தியாவிற்கான முக்கிய சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்தியா நோக்கி வந்த 30 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்துவிட்டன, அதே வேளையில், இந்தியாவிற்குச் சொந்தமான மேலும் 26 கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை கடப்பதற்காக காத்திருக்கின்றன என்று கப்பல் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை தினசரி 10க்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்ற நிலையில், ஜூன் 15ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 22 சரக்குக் கப்பல்கள் இந்த ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்துள்ளன. சமீப நாட்களாக கப்பல் போக்குவரத்து அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.