Home பக்தி 150 கிலோ கொழுக்கட்டை உச்சிப்பிள்ளையாருக்கு நெய்வேத்தியம்

150 கிலோ கொழுக்கட்டை உச்சிப்பிள்ளையாருக்கு நெய்வேத்தியம்

திருச்சி: செப்.15-
திருச்சியின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டையின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள மாணிக்க விநாயகருக்கும், மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கும் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆண்டுதோறும் 150 கிலோ கொழுக்கட்டை தயாரித்து நெய்வேத்தியம் செய்வது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான கொழுக்கட்டை தயாரிக்கும் பணி கடந்த 13ஆம் தேதி காலை தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற பணிகளுக்குப் பிறகு, இன்று காலை 9 மணிக்கு மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டையும், உச்சிப்பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டையும் நெய்வேத்தியம் செய்யப்பட்டன.
தயார் செய்யப்பட்ட கொழுக்கட்டையை உச்சிப்பிளையாருக்கு படைப்பதற்காக கோயில் பணியாளர்கள் டோலி மூலம் எடுத்துச் சென்று நெய்வேத்தியம் செய்தனர். பச்சரிசி, வெல்லம், தேங்காய் உள்ளிட்ட பொருள்களைப் பயன்படுத்தி, கோயில் பணியாளர்கள் பக்தி சிரத்தையுடன் கொழுக்கட்டையைத் தயாரித்தனர்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, விநாயகர் சதுர்த்தி நாளில் உச்சிப்பிள்ளையார் பிள்ளையார் புறப்பாடு நடைபெறும். அப்போது கோயில் பிரகாரம், உள்வீதி மற்றும் வெளிவீதிகளில் புறப்பாடு நடத்தப்படும். அந்த வகையில், இன்று விநாயகர் புறப்பாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.