Home பக்தி சமயபுரம் உண்டியலில் ரூ.77 லட்சம்

சமயபுரம் உண்டியலில் ரூ.77 லட்சம்

திருச்சி: செப். 10-
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள், கோவில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் 2 முறை எண்ணப்படுகின்றன. அதன்படி, இந்த மாதத்தின் முதல் எண்ணிக்கையாக, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரும் கோவில் தக்காருமான ஞானசேகரன், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன், மண்ணச்சநல்லூர் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
இதில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.77 லட்சத்து 16 ஆயிரத்து 600 ரொக்கம், 1 கிலோ 315 கிராம் தங்கம், 1 கிலோ 540 கிராம் வெள்ளி, 172 வெளிநாட்டு நோட்டுகள் மற்றும் 1,081 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்தன. மேலும், பித்தளைப் பொருட்கள், பட்டுப் புடவைகள் உள்ளிட்டவையும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.