
நியூ ஜெர்சி, ஜூலை 20- பிரான்ஸ் அணியின் முன்னணி வீரர் கிலியன் எம்பாப்பே, உலகக் கோப்பை வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தத் தொடரில் மொத்தம் 10 கோல்களை அடித்த அவர், ‘கோல்டன் பூட்’ (அதிக கோல் அடித்தவருக்கான விருது) விருதைத் தட்டிச் சென்றார். இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை கோல்டன் பூட் விருது வென்ற முதல் வீரர் என்ற உலக சாதனையை எம்பாப்பே படைத்தார். இதற்கு முன் 2022 கத்தார் உலகக் கோப்பையிலும் (8 கோல்கள்) அவரே இந்த விருதை வென்றிருந்தார். அடித்த அவர், ‘கோல்டன் பூட்’ (அதிக கோல் அடித்தவருக்கான விருது) விருதைத் தட்டிச் சென்றார். இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை கோல்டன் பூட் விருது வென்ற முதல் வீரர் என்ற உலக சாதனையை எம்பாப்பே படைத்தார். இதற்கு முன் 2022 கத்தார் உலகக் கோப்பையிலும் (8 கோல்கள்) அவரே இந்த விருதை வென்றிருந்தார். 22 கோல்களுடன் முதலிடம்: உலகக் கோப்பை வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், மெஸ்ஸியை (21 கோல்) முந்தி, 22 கோல்களுடன் எம்பாப்பே இப்போது முதலிடத்தில் உள்ளார். கடந்த 1970ல் ஜெர்மனியின் கெர்ட் முல்லருக்குப் பிறகு, ஒரே உலகக் கோப்பை தொடரில் 10 கோல்களைத் தொட்ட முதல் வீரர் எம்பாப்பே தான். விருதுகளை அள்ளிய ஸ்பெயின்! சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி, தனிநபர் விருதுகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளியது. கோல்டன் பால்’ வென்ற ரோத்ரி: ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோத்ரி, தொடரின் சிறந்த வீரருக்கான ‘கோல்டன் பால்’ விருதை வென்றார். அர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கு ‘சில்வர் பால்’ விருதும், எம்பாப்பேவுக்கு ‘வெண்கல பால்’ விருதும் வழங்கப்பட்டது. ஒரே ஒரு கோல்… மிரட்டிய உனாய் சிமோன்: ஸ்பெயின் கோல்கீப்பர் உனாய் சிமோன், சிறந்த கோல்கீப்பருக்கான ‘கோல்டன் க்ளோவ்’ விருதை வென்றார். இந்தத் தொடரில் விளையாடிய 8 போட்டிகளில், பெல்ஜியத்திற்கு எதிரான ஒரே ஒரு கோலைத் தவிர, மற்ற 7 போட்டிகளிலும் எதிரணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் ‘க்ளீன் ஷீட்’ தக்கவைத்து மிரட்டினார். சிறந்த இளம் வீரர் கியூபார்சி: ஸ்பெயின் அணியின் 19 வயது இளம் பின்கள வீரர் பாவ் கியூபார்சி, ‘சிறந்த இளம் வீரர்’ விருதைத் தட்டிச் சென்றார்.
















