Home விளையாட்டு 3-வது இடத்​துக்​கான ஆட்டத்தில் கோல் மழை – பிரான்ஸை வீழ்த்தியது இங்கிலாந்து

3-வது இடத்​துக்​கான ஆட்டத்தில் கோல் மழை – பிரான்ஸை வீழ்த்தியது இங்கிலாந்து

மியாமி, ஜூலை 20- பிஃபா உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் 3-ம் இடத்​துக்​கான ஆட்​டத்​தில் கோல் மழை பொழிந்​தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 6-4 என்ற கோல் கணக்​கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி 3-வது இடத்​தைப் பிடித்​துள்​ளது. 23-வது உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்டி அமெரிக்​கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடு​களில் நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று அதி​காலை 12.30 மணிக்கு மியாமி​யில் நடை​பெற்ற 3-வது இடத்​துக்​கான ஆட்​டத்​தில் பிரான்​ஸ், இங்கிலாந்து அணி​கள் மோதின. ஆட்​டத்​தின் தொடக்​கம் முதலே இங்​கிலாந்து வீரர்​கள் தாக்​குதல் ஆட்​டத்​தைத் தொடங்கி பிரான்ஸ் அணிக்கு கடும் நெருக்​குதலைக் கொடுத்​தனர். இங்​கிலாந்து அணிக்கு 3-வது நிமிடத்​திலேயே முதல் கோல் கிடைத்​தது. இந்த கோலை இங்​கிலாந்து வீரர் டெக்​லான் ரைஸ் அடித்து கோல் கணக்​கைத் தொடங்கி வைத்​தார். இதனால் பிரான்ஸ் வீரர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர். அந்த அதிர்ச்​சியி​லிருந்து பிரான்ஸ் அணி மீள்​வதற்​குள் 2-வது கோலை​யும் இங்​கிலாந்து அடித்​தது. ஆட்​டத்​தின் 18-வது நிமிடத்​தில் இங்​கிலாந்து அணி​யின் எஸ்ரி கோன்சா அந்த கோலை அடித்​தார். இதனால், 2-0 என்ற கோல் கணக்​கில் இங்​கிலாந்து முன்​னிலை பெற்​றது. பிரான்ஸ் அணி வீரர்​கள் கோல் கம்​பத்தை நோக்கி அடித்த பந்​துகளை இங்​கிலாந்து கோல்​கீப்​பர் லாவக​மாக தடுத்​தார். இந்​நிலை​யில் இங்​கிலாந்து வீரர் புகாயோ சாகா 37-வது நிமிடத்​தில் ஒரு கோலடித்​தார். இதனால் 3-0 என்ற கணக்​கில் இங்​கிலாந்து அணி முன்​னிலை பெற்​றது. இதைத் தொடர்ந்து 45+1 நிமிடத்​தில் மற்​றுமொரு கோல் அடித்து அசத்​தி​னார் புகாயோ சாகா. இதனால் முதல் பாதி முடி​வில் இங்​கிலாந்து 4-0 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை​யில் இருந்​தது. முதல் பாதி​யிலேயே 4 கோல்​களை இங்​கிலாந்து வீரர்​கள் அடித்​த​தால் பிரான்ஸ் அணி நிலைகுலைந்து போனது.