Home மாவட்டங்கள் பெங்களூர் 5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் நீட்டிப்பு

5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் நீட்டிப்பு

சென்னை: ஆக. 21-
எழும்பூர் ரயில் நிலை​யத்​தின் மறுசீரமைப்பு பணி​யால், 5 விரைவு ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. ஆக.25 முதல் செப்​.7-ம் தேதி வரை சில மின்​சார ரயில்​களின் சேவை​கள் ரத்து செய்​யப்​பட​வுள்​ளன.சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மறுசீரமைப்பு பணி​கள், சுமார் ரூ.842 கோடி மதிப்​பில், பல கட்​டங்​களாக நடை​பெறுகின்​றன. இதன் 2-ம் கட்​ட​மாக, புதிய நடைமேடை அமைக்​கும் பணி​கள் கடந்த ஜூலை முதல் இரண்டு பிரிவு​களாக நடை​பெறுகின்​றன.
முதல் பிரி​வில் 1 முதல் 5-வது நடைமேடை வரை​யிலும், 2-ம் பிரி​வில் 6-வது முதல் 11-வது நடைமேடை வரை​யிலும் கட்​டு​மானப் பணி​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.
குறிப்​பாக, 6-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை பகு​தி​களில், கட்​டு​மானப் பணி​களை மேற்​கொள்​வதற்​காக நிலை​யத்​தின் நடுப்​பகு​தி​யில் 500 மெட்​ரிக் டன் திறன் கொண்ட கிரேன் நிலைநிறுத்​தப்​பட்​டுள்​ளது.