ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கிய 700 கப்பல்கள்

டெஹ்ரான்: மார்ச் 4-
இஸ்​ரேல் – ஈரான் போர் காரண​மாக சுமார் 700 டேங்க்​கர் கப்பல்கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் முடங்கி உள்​ளன. இதனால் உலக நாடு​களுக்​கான கச்சா எண்​ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​பட்டுள்​ளது.
அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து கடந்த சனிக்​கிழமை முதல் ஈரான் மீது தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதற்கு ஈரான் ராணுவ​மும் தக்க பதிலடி கொடுத்து வரு​கிறது.
இந்​தப் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகச் செல்​லும் உலக நாடு​களுக்கு செல்​லும் கச்சா எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்து முற்​றி​லும் முடங்​கி​யுள்​ளது. இதனால் கிழக்​கு-மேற்கு இடையி​லான 86% எண்​ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​பட்​டு, எரிசக்தி சந்தை பெரும் நெருக்​கடியைச் சந்​தித்​துள்​ளது.
கடற்​படை பகுப்​பாய்வு நிறு​வனங்​களான விண்ட்​வர்ட் மற்​றும் கெப்​லர் தரவு​களின்​படி, இந்த நீர்​வழிப்​பாதை அதி​காரப்​பூர்​வ​மாக மூடப்​பட​வில்லை என்​றாலும், நடை​முறை​யில் அது முடங்​கியே உள்​ளது.
மார்ச் 1-ம் தேதி 28 லட்​சம் பேரல் எண்​ணெயைச் சுமந்து சென்ற மூன்று கப்பல்கள் மட்​டுமே ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடந்​தன. இது 2026-ன் தினசரி சராசரி​யான 1.98 கோடி பேரல்​களில் இருந்து 86% சரி​வாகும். மார்ச் 2-ம் தேதி அதி​காலை நில​வரப்​படி, ஒரு சிறிய டேங்​கர் மற்​றும் ஒரு சரக்​குக் கப்​பல் மட்​டுமே பிர​தான பாதை​யில் நகர்ந்​தன. ஈரான் நாட்​டைச் சேராத சுமார் 706 டேங்​கர் கப்பல்கள் தற்​போது ஜலசந்​தி​யின் இரு​புற​மும் வரிசை​யாக நிற்​கின்​றன. இதில் 334 கச்சா எண்​ணெய் தாங்​கி​கள், 109 கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்​புப் பொருட்​கள் கொண்ட கப்பல்கள் மற்​றும் 263 சுத்​தி​கரிக்​கப்​பட்ட எரிபொருள் கப்பல்கள் அடங்​கும். மேலும் 26 கப்பல்கள் சரி​யான இலக்​கின்றி வளை​குடா பகு​திக்​குள் மிதக்​கின்​றன.