Home பக்தி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு

குமுளி: மார்ச் 13-
சபரிமலை கோயி​லில் மாதாந்​திர பூஜைக்​காக நாளை மாலை நடை திறக்​கப்பட உள்​ளது.சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஒவ்​வொரு மலை​யாள மாதத்​தின் தொடக்​கத்​தி​லும் 5 நாட்​கள் வழி​பாடு நடை​பெறு​வது வழக்​கம்.
இதன்​படி மீனம் மாத (பங்​குனி) பூஜைக்​காக நாளை மாலை 5 மணிக்கு கரு​வறை நடை திறக்​கப்பட உள்​ளது.தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு தலை​மை​யில் மேல்​ சாந்தி பிர​சாத் நம்​பூ​திரி நடையை திறப்​பார். அன்று சிறப்பு பூஜைகள் எது​வும் நடை​பெறாது.மறு​நாள் (மார்ச் 15) அதி​காலை முதல் 19-ம் தேதி வரை கணபதி ஹோமம், நிர்​மால்ய பூஜை, படிபூஜை உள்​ளிட்ட பல்​வேறு வழி​பாடு​கள் நடை​பெறும்.பின்பு 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்​தப்​படும். ஆன்​லைன் முன்​ப​திவு மூலமே பக்​தர்​கள் தரிசனத்​துக்கு அனு​ம​திக்​கப்​படு​வர்.எனவே பக்​தர்​கள் தங்​களுக்​கான தரிசன தேதியை முன்​ப​திவு செய்து சபரிமலைக்கு வர வேண்​டும் என்று தேவசம்போர்டு தெரிவித்​துள்​ளது.