Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூருவில் கடும் பாதிப்பு

பெங்களூருவில் கடும் பாதிப்பு

பெங்களூரு: மார்ச் 14-
பெங்​களூரு​வில் வணிக பயன்​பாட்டு சிலிண்​டர்​கள் தட்​டுப்​பாடு காரண​மாக கள்ளச் சந்​தை​யில் ஒரு வணிக பயன்பாட்டு சிலிண்​டர் ரூ.10 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்யப்படு​கிறது.
ஈரான், இஸ்​ரேல், அமெரிக்கா ஆகிய நாடு​களுக்கு இடையே போர் காரண​மாக எரிபொருள் விநி​யோகம் கடுமை​யாக பாதிக்கப்பட்டுள்​ளது. இதன் காரண​மாக பெங்​களூரு​வில் வணிக நிறு​வனங்​களுக்கு வணிக‌ பயன்​பாட்டு சிலிண்​டர்​கள் வழங்​கு​வது நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நூற்​றுக்​கணக்​கான உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ளன. பெரும்​பாலான உணவகங்​களில் விற்​பனை செய்​யப்​படும் பண்​டங்​களின் எண்​ணிக்கை பெரு​மள​வில் குறைக்​கப்​பட்​டுள்​ளது.
பெங்​களூரு​வில் இயங்​கி வரும் ஆயிரக்​கணக்​கான தங்​கும் விடுதிகளில் உணவு தயாரிக்​கும் பணி​கள் வெகு​வாக பாதிக்கப்பட்​டுள்​ளது. இதனால் அவற்றில் தங்​கி​யுள்ள லட்​சக்​கணக்​கானவர்​கள் கடும் சிரமத்​துக்கு ஆளாகி​யுள்​ளனர். உணவகங்​கள், தங்​கும் விடு​தி​கள் விறகு, மின்​சார அடுப்பு மூலம் உணவு சமைக்​கும் நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளன.சிலிண்​டர் தட்​டுப்​பாடு நில​வும் அதே சூழலில், கள்ளச் சந்​தை​யில் சிலிண்​டர் விற்​பனை அதி​கரித்​துள்​ளது. வணிக‌ பயன்​பாட்டு சிலிண்​டர்​கள் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்​பனை செய்​யப்​படு​கிறது. வீட்டு பயன்பாட்டுக்கு உதவும் சிலிண்​டர் ரூ.4 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்​யப்​படு​வ​தாக கூறப்படுகிறது.இந்​நிலை​யில் கர்​நாடக உணவு மற்​றும் விநி​யோகத் துறை அமைச்​சர் கே.எச்​.​முனியப்பா நேற்று பெங்​களூரு​வில் இந்​தி​யன் ஆயில், பாரத் பெட்​ரோலி​யம், கெயில் எரி​வா​யு, ஹிந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் உள்​ளிட்ட எரிபொருள் நிறு​வனங்​களு​டன் அவசர ஆலோ​சனை மேற்​கொண்​டார்.