
வாஷிங்டன்: ஏப்ரல் 18-
உலகிலேயே பெரும் வல்லரசு நாடு என்றும், பாதுகாப்பு படைகளுக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடாகவும் அமெரிக்கா உள்ளது. ஆனால் டிரம்பை நம்பி ஈரானுக்கு எதிராக உயிரை பணயம் வைத்து நடுக்கடலில் சண்டையிட்டு வரும் அமெரிக்காவின் கடற்படை வீரர்கள் தற்போது பசியில் வாடி வதங்கி வருகின்றனர். போர்க்கப்பல்களில் உள்ள அமெரிக்காவின் கடற்படை வீரர்களின் உணவுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு வீரருக்கு ஒரு இறைச்சி துண்டு, கொஞ்சமாக வேகவைத்த கேரட் உள்ளிட்டவை மட்டுமே வழங்கப்படுவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே நடந்த போர் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ஈரான் மூடி வைத்திருந்த ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்து வந்தது. தற்போது அனைத்து நாடுகளின் கப்பல்களும் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்க ஈரான் அனுமதி கொடுத்துள்ளது.ஈரானின் இந்த திடீர் மனமாற்றத்துக்கு இஸ்ரேல் – லெபனான் இடையேயான 10 நாள் போர் நிறுத்தம் தான் காரணம். ஈரானுக்கு ஆதரவாக லெபனான், இஸ்ரேலை தாக்கியது. இதனால் இருநாடுகள் இடையே மோதல் நீடித்து வந்தது. டிரம்ப் தலையிட்டு இருநாடுகளுக்கு இடையேயான மோதலை 10 நாள் நிறுத்தினார். இதையடுத்து தான் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துள்ளது. 2 போர்க்கப்பல்கள் இருப்பினும் கூட மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஈரான் அருகே அமெரிக்கா தனது யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மற்றும் யுஎஸ்எஸ் ட்ரிபோலி என்ற 2 ராட்சச போர்க்கப்பல்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் என்பது விமானம் தாங்கி போர்க்கப்பலாகும். யுஎஸ்எஸ் திரிபோலி போர்க்கப்பல் என்பது ராணுவம், கடற்படை, விமானப்படை என்று முப்படைகளையும் ஒருங்கிணைத்து தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும். இந்த போர்க்கப்பல் விமானம் தாங்கி கப்பலாக விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுமந்து செல்வதோடு, நிலத்தில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கு தேவையான டாங்கி வாகனங்கள் உள்பட பிற ராணுவ தளவாடங்களை இந்த கப்பல் வழியாக கடற்கரைக்கு கொண்டு செல்ல முடியும். இந்த 2 போர்க்கப்பல்களிலும் கடற்படை, விமானப்படை, ராணுவ வீரர்கள் உள்ளனர்.
ஒரு ரொட்டி – வேகவைத்த கேரட் இந்த 2 போர்க்கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அமெரிக்க போர்க்கப்பல்களில் கடுமையாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடற்படை வீரர்கள் இதுதொடர்பாக தங்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதோடு உணவு தட்டுப்பாடு தொடர்பான போட்டோக்களை குடும்பத்தினருடன் பகிர்ந்துள்ளனர்.அதன்படி 3,500 கடற்படை வீரர்களுடன் சென்றுள்ள யுஎஸ்எஸ் திரிபோலி போர்க்கப்பலில் வீரர் ஒருவருக்கு ஒரு டார்ட்டில்லா (ஒருவகையான ரொட்டி) மற்றும் வேகவைத்த கேரட் மட்டுமே வழங்கப்படுகிறது.




















