Home விளையாட்டு “எ​திரணி​யைத் துளைக்​கும் பந்து​வீச்சு எங்​களிடம் இல்லை” – ஜெயவர்தனே வருத்​தம்

“எ​திரணி​யைத் துளைக்​கும் பந்து​வீச்சு எங்​களிடம் இல்லை” – ஜெயவர்தனே வருத்​தம்

மும்பை, ஏப்ரல் 18- மும்பை இந்தியன்ஸ் அணி​யின் ஒட்​டுமொத்​தப் பந்​து​வீச்சு துறை​யின் திறமை​யின்மை குறித்​தும், குறிப்பாக பவர் பிளே ஓவர்​களில் விக்​கெட்​டு​களை எடுக்க முடி​யாமல் திணறு​வது குறித்​தும் தனது கவலையை வெளிப்​படுத்​தி​யுள்​ளார் பயிற்​சி​யாளர் மஹேலா ஜெயவர்தனே. ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. இந்த ஆட்​டத்​தில் 196 ரன்​கள் இலக்கை துரத்​திய பஞ்​சாப் அணி ஸ்ரேயஸ் ஐயர், பிரப்சிம்​ரன் சிங் ஆகியோ​ராது அதிரடி​யால் 21 பந்​துகளை மீதம் வைத்து வெற்றி கண்​டது. மும்பை அணி​யின் நட்​சத்​திர பந்​து​வீச்​சாள​ரான ஜஸ்​பிரீத் பும்ரா 4 ஓவர்​களை வீசி 41 ரன்​களை தாரை​வார்த்​தார். இம்முறை​யும் அவர், விக்​கெட் ஏதும் கைப்​பற்​ற​வில்​லை. மும்பை அணிக்கு 5 ஆட்​டங்​களில் 4-வது தோல்​வி​யாக இது அமைந்​தது. போட்​டிக்கு பின்​னர் மும்பை அணி​யின் பயிற்சி​யாள​ரான மஹேலா ஜெய​வர்​தனே கூறிய​தாவது: ஜஸ்​பிரீத் பும்ரா சிறப்​பாகவே பந்​து​வீசுகிறார். ஆனால் பவர் பிளே ஓவர்​களில் நாங்​கள் எதிரணிக்​குக் அழுத்​தத்தை கொடுக்​கத் தவறி​விடு​கிறோம். பும்​ரா​விற்கு எதி​ராகப் எதிரணி​யினர் பெரிய அளவில் ரிஸ்க் எடுப்பதில்லை. நாங்​கள் சில புதிய முயற்​சிகளைச் செய்து பார்த்​தோம். பும்​ரா​வும் சில விஷ​யங்​களை முயற்சி செய்து வரு​கிறார். ஆனால் எதிரணி​யினர் மிகச் சிறப்​பாகப் பேட்டிங் செய்​கிறார்​கள். அவர் விக்​கெட் எடுக்​காததற்கு இது​தான் காரணம் என்று என்​னால் எதை​யும் விரலை நீட்டி சொல்ல முடி​யாது. டி20 உலகக் கோப்​பை​யின் போது ஏற்​பட்ட ஒரு சிறியகாயமே இதற்​குக் காரணம் என்று நான் நினைக்கிறேன். நாங்​கள் அவரது உடல்​நிலையை படிப்படியாக மேம்​படுத்த விரும்​பினோம். கடந்த சில போட்​டிகளாக அவரது பந்​து​வீச்சு வேகம் அதி​கரித்​துள்​ளது. அவர், தற்​போது சவு​கரிய​மாக உணர்​கிறார். சில நேரங்களில் சிறிய அளவில் அதிர்​ஷ்ட​மும் தேவைப்படுகிறது.