Home விளையாட்டு ஹாட்ரிக் வெற்றி பெறுமா சிஎஸ்கே? – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் இன்று மோதல்

ஹாட்ரிக் வெற்றி பெறுமா சிஎஸ்கே? – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் இன்று மோதல்

ஹைதராபாத், ஏப்ரல் 18- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைத​ரா​பாத்​தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி, 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி​யுடன் மோதுகிறது. இஷான் கிஷன் தலை​மையி​லான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது. முதல் நான்கு போட்​டிகளில் மூன்​றில் தோல்​வியடைந்த நிலை​யில் அந்த அணி கடைசி​யாக தனது சொந்த மைதானத்​தில் கம்​பீர​மாக மீண்டு வந்​தது. அந்த ஆட்​டத்​தில் அறி​முக வீரர்​களாக களமிறங்​கிய இளம் வேகப்​பந்து வீச்​சாளர்​களான பிரஃபுல் ஹிங்​கே, ஷகிப் ஹுசைன் ஆகியோர் அபார​மாக செயல்​பட்டு இருந்​தனர்.
இவர்​கள் இரு​வரின் வருகை அணி​யின் நம்​பிக்​கையை அதி​கரிக்​கச் செய்​துள்​ளது. மேலும் அணி​யும் சமநிலையை அடைந்​துள்​ளது. ராஜஸ்​தான் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஹைத​ரா​பாத் அணி​யில் அனுபவம் வாய்ந்த வீரர்​களான ஹர்​ஷல் படேல், ஜெய்​தேவ் உனத்​கட் ஆகியோ​ருக்​குப் பதிலாகக் களமிறக்​கப்​பட்ட பிரஃபுல் ஹிங்​கே, ஷகிப் ஹுசைன் ஆகியோர் ஆட்​டம் தொடங்​கியதுமே மிகப்​பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்​தினர்.முதல் மூன்று ஓவர்​களுக்​குள்​ளேயே ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை 9 ரன்​களுக்கு 5 விக்​கெட் என்ற நிலைக்​குச் சரியச் செய்து நடப்பு சீசனில் அந்த அணி​யின் முதல் தோல்விக்​குக் காரண​மாக அமைந்​தனர்.
விதர்​பாவைச் சேர்ந்த 24 வயதான பிரஃபுல் ஹிங்​கே, ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் முன்​வரிசை வீரர்​களான வைபவ் சூர்​ய​வன்​ஷி, துருவ் ஜுரல், லுவான்​-டிரே பிரிட்​டோரியஸ், கேப்​டன் ரியான் பராக் ஆகியோரைத் தனது முதல் இரண்டு ஓவர்​களி​லேயே வீழ்த்தி அந்த அணியை நிலைகுலை​யச் செய்​தார். அவர் தனது 4 ஓவர்​களில் 34 ரன்​கள் மட்​டுமே விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​டு​களைக் கைப்​பற்றி அசத்தியிருந்தார்.