Home மாவட்டங்கள் பெங்களூர் பிஜேபியை வாரி சுருட்டிய தமிழ்நாடு

பிஜேபியை வாரி சுருட்டிய தமிழ்நாடு

சென்னை: மே. 5-
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், பாஜகவின் தோல்விதான். அக்கட்சியின் மாநில தலைவரான நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எல்.முருகன் ஆகியோரும் இந்த தேர்தலில் தோல்வியடைந்திருக்கின்றனர். கடந்த முறை 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக, இந்தமுறை ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே ஜெயித்திருப்பது, கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிலும் தற்போதைய பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனின் தோல்வி கட்சியின் கட்டுமானம் எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் பலவீனமாக இருக்கிறது என்பதையும், தமிழக மக்களின் சிந்தனை தெளிவையும் வெளிப்படுத்தியிருக்கிறது என அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.நயினார் நாகேந்திரன் பெற்ற வாக்கு – 56,071 (தோல்வி)
கடற்கரைராஜ் (திமுக) – 62,060 (வெற்றி)
வாக்கு வித்தியாசம் – 5,989
தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன் பெற்ற வாக்கு – 32,328 (தோல்வி)
தவெக வெங்கடரமனன் – 70,070 (வெற்றி)
வாக்கு வித்தியாசம் – 37,742
தொடர் தோல்வி
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் அவர் அப்போது பெற்றிருந்த வாக்கு சதவிகிதம் 26.44%. இந்த தேர்தலில் அப்படியே இந்த வாக்கு சதவிகிதம் 22% ஆக குறைந்திருக்கிறது. அடுத்து எல்.முருகன் தொகுதிக்கு வருவோம்.
எல்.முருகன் பெற்ற வாக்கு – 68,836 (தோல்வி)
தவெக வேட்பாளர் கமலி – 84,209 (வெற்றி)
வாக்கு வித்தியாசம் – 15,373
இதற்கு முன்னர் எல்.முருகன் போட்டியிட்ட தேர்தல்களில் தொடர்ந்து அவருடைய வாக்கு சதவிகிதம் குறைந்துக்கொண்டே வந்தருக்கிறது. குறிப்பாக,
2021 சட்டமன்றத் தேர்தல் (தாராபுரம் – தனி): – 42.23%
2024 நாடாளுமன்றத் தேர்தல் (நீலகிரி – தனி): – 36.32%
2026 சட்டமன்ற தேர்தல் அவினாசி: – 30.5%
இப்படியாக பாஜகவின் இன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் தலைவர்களின் வாக்கு சதவிகிதம் குறைந்துக்கொண்டே வந்திருக்கிறது.கொண்டாடும் திமுக கூட்டணிபாஜகவின் இந்த தோல்வியை திமுக கூட்டணிகள் கொண்டாடி வருகின்றன. திமுக இந்த முறை தோற்றிருந்தாலும், பாஜகவின் தோல்வியை அவர்கள் முக்கியமாக பார்க்கின்றனர்.“அதிமுக -பாஜக கூட்டணிக்குப் பாடம் புகட்டியுள்ள அதே வேளையில், மதசார்பற்ற சக்திகளான எமது கூட்டணிக்கும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை அளிக்கவில்லை. இது எமக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தாலும், அதிமுக தலைமையிலான சாதிய- மதவாத சங் பரிவார் கூட்டணியை மக்கள் வெகுவாகப் புறக்கணித்துள்ளனர் என்பது திமுக கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று திருமாவளவன் வெளிப்படையாக பாஜகவின் தோல்வியை வரவேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.