Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்​கா​வின் 14 அம்ச திட்டத்தை பரிசீலிப்பதாக ஈரான் தகவல்

அமெரிக்​கா​வின் 14 அம்ச திட்டத்தை பரிசீலிப்பதாக ஈரான் தகவல்

டெஹ்​ரான், மே 8- அமெரிக்​கா​வின் 14 அம்ச அமைதி திட்​டத்தை பரிசீலித்து வரு​கிறோம் என்று ஈரான் வெளி​யுறவுத் துறை தெரிவித்​துள்​ளது. அமெரிக்​கா, ஈரான் இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வந்​தது. கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி இரு தரப்பு இடையே போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது. இந்த சூழலில் போருக்கு நிரந்தர முற்​றுப்​புள்ளி வைக்க 14 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்கா முன்​மொழிந்து உள்​ளது. அடுத்த 15 ஆண்​டு​களுக்கு யுரேனி​யத்தை செறிவூட்​டக்​கூ​டாது. தற்​போது கையிருப்​பில் உள்ள செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யத்தை அமெரிக்​கா​விடம் வழங்க வேண்​டும். ஹார்​முஸ் ஜலசந்​தியை முழு​மை​யாக திறக்க வேண்​டும். இந்த நடவடிக்​கைகளுக்கு பதிலாக அமெரிக்​கா​வின் பொருளா​தார தடை​யால் முடக்​கப்​பட்ட ஈரானின் சொத்​துகள், நிதி ஆதா​ரங்​கள் விடுவிக்​கப்​படும் என்பன உள்​ளிட்ட 14 அம்ச திட்​டத்தை அமெரிக்கா முன்மொழிந்திருக்கிறது. இது குறித்து ஈரான் வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் நேற்று கூறும்​போது, “அமெரிக்​கா​வின் அமைதி திட்​டத்தை தீவிரமாக பரிசீலித்து வரு​கிறோம். எங்​களது முடிவை பாகிஸ்​தான் மூலம் அமெரிக்கா​வுக்கு தெரி​விப்​போம்” என்​றார். ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி கூறும்​போது, “அமெரிக்கா உடனான ராஜ்ஜிய ரீ​தியி​லான பேச்​சு​வார்த்​தை​யில் ஈரானின் கை ஓங்​கி​யிருக்​கிறது. நியாய​மான அமைதி ஒப்​பந்​தத்தை மட்​டுமே ஏற்​றுக் கொள்​வோம்” என்றார். ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நேற்று முன்​தினம் பிரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மெக்​ரானிடம் தொலைபேசி​யில் பேசினார். அப்​போது பெசெஷ்கியன் கூறும்​போது, “சர்​வ​தேச சட்ட விதி​களுக்கு உட்​பட்ட அமைதி பேச்​சு​வார்த்தை மூலம் போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க ஈரான் விரும்​பு​கிறது. அதே​நேரம் ஈரான் மக்​களின் உரிமை​களை ஒரு​போதும் விட்​டுக் கொடுக்க மாட்​டோம்” என்றார்.