
திருவனந்தபுரம்: மே 13-
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது. இதில் கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்கு பதிவு நடந்தது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது.கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகளுக்கு சட்டமற்ற உறுப்பினர் தேர்தல் நடைப்பெற்றது.
இதில் காங்கிரஸ் கூட்டணி 102 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
முதலமைச்சர் பதவிக்கு கேரள காங்கிரசில் பல்வேறு குழுக்கள் முயற்சிப்பதால், முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் திணறி வருகின்றது.
தற்போது காங்கிரஸ் கட்சியில் வி.டி. சதீசன், ரமேஷ் சென்னிதலா, கே.சி. வேணுகோபால் இடையே முதலமைச்சர் பதவியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.
கடந்த 8 நாட்களாக இந்த பேச்சு வார்த்தை டெல்லி மற்றும் கேரளத்திலும் நடைபெற்று வருகிறதே தவிர தீர்வு எட்டப்படவில்லை. கேரள முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்று காங்கிரஸ் உயர்மட்ட குழு கூடி விவாதிக்கிறது. வாக்களித்த மக்கள் எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கின்றனர்.


















