
புதுடெல்லி:மே 13-
ஈரான் போர் இந்தியாவில் தன்னுடைய கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. இரண்டு மாத காலமாக ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் எல்பிஜி வினியோகம் தடைப்பட்டு இருக்கிறது. இதனால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது.
மத்திய அரசு வேறு நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து வருகிறது. இருந்தாலும் நிலைமை சற்று மோசம் அடைவதாகவே தெரிகிறது. ஏனெனில் ஈரான் போர் தற்போது முடிவுக்கு வருவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. இந்த நிலை இப்படியே நீடிக்கும் போது இந்தியா இன்னும் சில மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அஞ்சப்படுகிறது.
மத்திய அரசு அடுத்த கட்டமாக பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுக்கப் போவதற்கான ஒரு ஆரம்ப புள்ளி தான் பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோள். மோடி அறிவித்த இரண்டு தினங்களில் மத்திய அரசு மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்கும் பொருட்டு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. இந்த சூழலில் கோடக் நிறுவனத்தின் தலைவரான உதய் கோடக் இந்திய மக்களுக்கு மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் ஈரான் போரின் தாக்கத்தை கடந்த இரண்டு மாதங்களாக இந்தியா பெரிய அளவில் உணரவில்லை குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை மாறவில்லை. ஆனால் இனிவரும் நாட்கள் மக்களுக்கு கடினமானதாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
கடினமான நாட்கள் வருகின்றன மக்கள் அதனை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்


















