Home செய்திகள் தேசிய செய்திகள் மேற்கு வங்க தலைமைச் செயலர் நியமனம் பற்றி ராகுல் விமர்சனம்

மேற்கு வங்க தலைமைச் செயலர் நியமனம் பற்றி ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: மே 13-
மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக அமோக வெற்றி பெற்​ற​து. இதையடுத்து இது குறித்து மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் முதல்​வ​ராக பொறுப்பேற்ற சுவேந்து அதி​காரி, முன்​னாள் தலைமை தேர்​தல் அதி​காரி மனோஜ் அகர்​வாலை மாநிலத்​தின் தலை​மைச் செயலாள​ராக நியமித்​துள்​ளார்.இது குறித்து மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “பாஜக – தேர்​தல் ஆணை​யைத்​தின் திருட்டு சந்​தை​யில் திருட்டு எவ்​வளவு பெரியதோ, பரிசும் அவ்​வளவு பெரியது” என்று கூறி​யுள்​ளார். இந்த நியமனத்தை தற்​போது எதிர்க்​கட்​சி​யாக இருக்​கும் திரிண​மூல் காங்​கிரஸும் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளது.இக்​கட்​சி​யின் சாகேத் கோகலே வெளி​யிட்ட ‘எக்​ஸ்’ பதி​வில், “தேர்தல் ஆணை​யத்​துக்​காக மேற்கு வங்க தேர்​தலை நடத்​திய மனோஜ் அகர்​வால், புதிய பாஜக அரசால் தலை​மைச் செயலாளராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். பாஜக​வும் தேர்​தல் ஆணைய​மும் தேர்​தலை திருடியதை இப்​போது வெளிப்​படை​யாக ஒப்​புக்​கொள்​கின்​றன. இவை நீதி​மன்​றங்​களின் கண்​களுக்கு தெரிய​வில்​லை​யா ?” என்​றும் கேள்​வி எழுப்​பி​யுள்​ளார்​.