
கொல்கத்தா, ஜூன் 9-
தேர்தல் தோல்வியை அடுத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பெரும்பான்மை எம்எல்ஏ.க்கள் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனி அணியாக பிரிந்தனர். இந்நிலையில் திரிணமூல் எம்.பி.க்கள் 16 பேர், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியை நேற்று சந்தித்தனர்.மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெறும் 80 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது. தேர்தல் தோல்விக்குப் பின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட ஆரம்பித்தது. 59 எம்எல்ஏக்கள் மம்தாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனி அணியாக உருவாகினர். பெரும்பான்மை அடிப்படையில் அவர்களில் ரிதப்ரதா பானர்ஜி என்பவருக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வழங்கப்பட்டது. இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று டெல்லியில் இருந்தார். அப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 16 எம்.பி.க்கள் சுகேந்து ரே மற்றும் ககோலி தஸ்திதர் தலைமையில் மாநில முதல்வர் சுவேந்து அதிகாரியை நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பு பாஜக அமைச்சர் ஒருவர் வீட்டில் நடைபெற்றது. இவர்கள் தங்களை தனி அணியாக மக்களவையில் அமர வைக்கும்படி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த 16 எம்.பி.களில் சேகர் ராய் மட்டும் மாநிலங்களவை உறுப்பினர். மற்ற 15 பேரும் மக்களவை உறுப்பினர்கள். பெரும்பான்மை அடிப்படையில் தனி அணியாக உருவாக 19 மக்களவை உறுப்பினர்கள் தேவை. இல்லையென்றால் கட்சி தாவல் நடவடிக்கையை சந்திக்க நேரிடும். திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்கெனவே 23 எம்.பி.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பில் இருந்தனர். இதனால் இவர்கள் தனி அணியாக உருவாக வாய்ப்புள்ளது. அவ்வாறு தனி அணியாக உருவானால் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிளவுபடுவது உறுதி என கூறப்படுகிறது.
சுகேந்து சேகர் ராஜினாமா: இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி சுகேந்து சேகர் ராய் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு ஊழலிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலும் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.



















