Home செய்திகள் தேசிய செய்திகள் இ100 எரிபொருள் விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்

இ100 எரிபொருள் விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்

புதுடெல்லி, ஜூன் 15- மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் நடை​பெற்ற நிகழ்ச்சி ஒன்​றில் பேசிய மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி, ஜூன் 12-ம் தேதி இ100 எரிபொருள் (100% எத்தனால்) பயன்​பாட்​டுக்​கான விதி​முறை​களில் கையெழுத்​திட்​டுள்​ள​தாகத் தெரி​வித்​தார். இதன் மூலம் வாக​னத் தயாரிப்​பாளர்​கள், எரிபொருள் விற்பனையாளர்​கள் மற்​றும் சோதனை முகமை​கள் எத்​த​னால் வாகனங்களின் வணிக ரீதி​யான வெளி​யீட்​டுக்​கான பணி​களைத் தொடங்கலாம்.
ஏப்​ரல் 2026-க்​குள் நிர்​ண​யிக்​கப்​பட்ட இலக்​குக்கு முன்​பாகவே 20% எத்​த​னால் கலப்பு (இ20) திட்​டத்தை இந்​தியா வெற்​றிகர​மாக எட்​டியதைத் தொடர்ந்து இந்த அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டம் மூலம் கச்சா எண்ணெய் இறக்​கும​திச் செல​வில் ரூ.1 லட்​சம் கோடிக்கு மேல் சேமிக்​கப்​பட்​டுள்​ளதோடு, விவ​சா​யிகளுக்கு ரூ.80,000 கோடி வருவாய் கிடைத்​துள்​ளது. இந்த அறி​விப்​பின் முக்​கிய அம்​ச​மாக, 100% எத்​த​னால் மூலம் இயங்​கக்​கூடிய ‘மாருதி சுசுகி வேகன்​ஆர்’ கார் அறிமுகப்படுத்தப்பட்​டுள்​ளது. மாருதி மட்​டுமின்றி டொயோட்​டா, எம்ஜி மற்​றும் ஹூண்​டாய் ஆகிய நிறுவனங்​களும் அடுத்த சில வாரங்​களில் இ100 ரக வாக​னங்​களை அறி​முகப்​படுத்த தயா​ராகி வரு​கின்​றன. இருசக்கர வாக​னப் பிரி​வில், ஹீரோ மோட்​டோ​கார்ப் நிறு​வனம் ஏற்​கெனவே இரண்டு பிளெக்​ஸ்​-பியூல் மோட்டார் சைக்​கிள்​களை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது.