Home மாவட்டங்கள் பெங்களூர் பெண் குத்திக் கொலை

பெண் குத்திக் கொலை

பெங்களூரு: ஜூன் 15-
ஆன்லைன் பெட்டிங் சூதாட்ட மோகத்தால், பிள்ளைகளின் கண் எதிரே பெண் ஹோம் கார்டு ஒருவரை அவரது கணவரே கத்தியால் 10 முறை கொடூரமாக குத்திக்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் பெங்களூரு மகதேவபுரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு மகதேவபுரா போலீஸ் நிலையத்தில் ஹோம் கார்டாக (ஊர்க்காவல் படை) பணியாற்றி வந்தவர் மஞ்சுளா (வயது 32). இவரது கணவர் பிரதீப், கார் டிரைவர். இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
சமீபகாலமாக பிரதீப்புக்கு ஆன்லைன் ஆப் மூலம் பெட்டிங் சூதாட்டத்தில் ஈடுபடும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் கடுமையான கடன் தொல்லையில் மூழ்கியது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், மஞ்சுளாவின் நடத்தையின் மீதும் பிரதீப் சந்தேகப்பட்டு வந்துள்ளார்.கணவனின் சித்ரவதை தாங்க முடியாமல், மஞ்சுளா தனது பிள்ளைகளுடன் கடந்த ஒரு மாதமாக உதயநகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் மஞ்சுளா இருந்த வீட்டுக்கு பிரதீப் சென்றுள்ளார். தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பது போல நாடகமாடியுள்ளார். “என்னை மன்னித்துவிடு, உன் காலில் விழுகிறேன், வீட்டுக்கு வா” என்று கூறி மஞ்சுளாவின் காலில் விழுந்துள்ளார்.