Home மாவட்டங்கள் பெங்களூர் தலைமைச் செயலகத்தில் பெண் திடீர் தர்ணா

தலைமைச் செயலகத்தில் பெண் திடீர் தர்ணா

சென்னை: ஜூன் 19-
முதல்​வரைப் பார்க்​காமல் செல்​ல​மாட்​டேன் எனக் கூறி, பெண் ஒரு​வர் தலை​மைச் செயலக வளாகத்​தில் தர்​ணா​வில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.
சட்​டப்​பேரவை கூட்​டத் தொடர் நேற்று தொடங்​கிய​தால் தலை​மைச் செயல​கத்​தில் பாது​காப்பு அதி​கரிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், முதல்​வர் விஜய்யை பார்த்து மனு கொடுப்​ப​தற்​காக ஒரு பெண் வந்​திருந்​தார். சட்​டப்​பேரவை நுழைவு வாயி​லின் அருகே காவல் ​துறை​யினர் அவரை தடுத்​து, முதல்​வரின் தனிப்​பிரிவு அறை​யில் காத்​திருக்க வலி​யுறுத்​தினர். ஆனால், அவர் மறுத்​து​விட்டு காவல்​ துறை​யினரிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார்.
‘இங்கு வரு​வதற்கு எனக்கு உரிமை உள்​ளது. நான் முதல்​வரை பார்க்​காமல் செல்​ல​மாட்​டேன்’ எனக் கூறி தலை​மைச் செயலக வளாகத்​தில் அமர்ந்து தர்​ணா​வில் ஈடுபட்டார்.
அழுத​வாறு தர்​ணா​வில் ஈடு​பட்ட அவரிடம் போலீ​ஸார் பேச்​சு​வார்த்தை நடத்​திய பின், வேறு இடத்​துக்​குச் சென்று நீண்ட நேரம் முதல்​வரை சந்​திக்க காத்​திருந்​தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்​பட்​டது.
தனது மகன் சீனா​வில் மருத்​து​வம் படித்து வந்த நிலை​யில், 2023-ம் ஆண்டு மீண்​டும் பயிற்​சிக்​காக சீனா சென்​ற​தாக​வும், அங்​குள்ள போலீ​ஸார் தவறாக அவரை கைது செய்​து​விட்​ட​தாக​வும், மகனை மீட்டு கொண்​டுவர டெல்லி சென்று மத்​திய அமைச்​சர் ராஜ்​நாத் சிங்கை சந்​தித்து மனு அளித்​தும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்பட​வில்லை என்​றும் அந்​தப் பெண் தெரி​வித்​தார். எனவே, இது தொடர்​பாக முதல்​வரை சந்​தித்து அவரிடம்​தான் மனு அளிப்​பேன் என அவர் கூறினார்.