Home செய்திகள் தேசிய செய்திகள் “காவிரி டெல்டாவை பார்வையிட வருகிறார் மத்திய நீர்வள ஆணைய தலைவர்

“காவிரி டெல்டாவை பார்வையிட வருகிறார் மத்திய நீர்வள ஆணைய தலைவர்

புதுடெல்லி, ஜூன் 25- காவிரி டெல்டாவைப் பார்வையிட மத்திய நீர்வள ஆணைய தலைவர் அனுபம் பிரசாத் நேரில் வர உள்ளதாக, அவரை டெல்லியில் சந்தித்த தமிழக காவிரி விவசாய சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லி வந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன், மத்திய நீர்வள ஆணைய தலைவர் அனுபம் பிரசாத், உறுப்பினர் செயலரும், மேகதாட்டு திட்டத்தின் பொறுப்பு அதிகாரியுமான யோகேஷ் பாட்டன்கர் ஆகியோரைச் சந்தித்தார். இந்த சந்திப்பு, டெல்லியின் சேவா பவனில் சுமார் 45 நிமிடம் நடைபெற்றது. இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: கர்நாடக முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை, மேகேதாட்டு அணைக்கு அனுமதி கோரி மத்திய நீர்வள ஆணையத்தில் கடந்த 2021ம் ஆண்டு வரைவு திட்ட அறிக்கையை வழங்கினார். இதில், தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அதனை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுப்பி வைத்தது. பின்னர், இந்த அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையமும் விவாதிக்க மறுத்து திருப்பி அனுப்பியது. தற்போது முதல்வராக உள்ள டி.கே.சிவகுமார், மேகதாட்டு அணையை கட்ட அனுமதி கோரி வருகிறார். இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நடவடிக்கையை பின்பற்றி மத்திய நீர்வள ஆணையமும் வரைவு திட்ட அறிக்கையை கர்நாடகாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என நேரில் வலியுறுத்தினேன்.