
மாஸ்கோ: ஜூலை 14 –
ஈரானுக்கு அதிநவீன வான்வழி கண்காணிப்பு விமானத்தை ( doomsday ) அனுப்பி வைத்திருப்பதன் மூலம், ஈரானுக்கு ஆதரவாக நேரடியாக ரஷ்யா களம் இறங்கியிருப்பது அமெரிக்காவிற்கு தெரியவந்துள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி மொத்த உலக நாடுகளுமே இந்த போரின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.ரஷ்யா ஒருவேளை முழுமையாக களம் இறங்கினால் அமெரிக்கா நினைத்தே பார்க்காத மாற்றங்கள் வரும் வாய்ப்பு உள்ளது. அது பற்றி பார்பபோம். அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்ட நாட்களாக நடந்த சண்டை அண்மையில் முடிவுக்கு வந்தது.
இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியதால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் நிலைமை வேகமாக சரியாகி வருகிறது. இந்த சூழலில் ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் கப்பல்கள் மீது ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியது. இதனை எதிர்த்து ஈரான் மீது அமெரிக்கா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் இருதரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் மொத்தமாக முறிந்தது. தற்போது அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளும் தற்போது வளைகுடாவில் தீவிரமாக ராணுவத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை ஈரான் தற்போது சரமாரியாக தாக்கி வருகிறது. பதிலுக்கு அமெரிக்காவும் தீவிர தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் போர் பதற்றம் உச்சம் அடைந்து வருகிறது.இதனிடையே அமெரிக்கா-ஈரான் போரில் வேடிக்கை மட்டும் பார்த்து வந்த ரஷ்யா முதல் முறையாக களம் இறங்கி உள்ளது. ரஷ்ய அதிபர் புதின், நாட்டின் அதிநவீன ராணுவக் கட்டுப்பாட்டு விமானத்தை ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு அனுப்பி வைத்துள்ளார்.














