Home மாவட்டங்கள் பெங்களூர் ரேஷன் வழங்கிய முதல்வர் விஜய்

ரேஷன் வழங்கிய முதல்வர் விஜய்

சென்னை: ஜூலை 14-
தேர்​தல் வெற்​றிக்​குப் பிறகு முதல்​வர் விஜய், முதல்​முறை​யாக தனது பெரம்​பூர் தொகு​திக்கு நேற்று சென்​றார். அங்கு புதுப்​பிக்​கப்​பட்ட பெரம்​பூர் சட்​டப்​பேரவை உறுப்​பினர் அலு​வல​கத்​தை​யும், புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள இ-சேவை மையத்​தை​யும் திறந்து வைத்​தார். அங்​குள்ள நியாய​விலைக் கடை​யில் நடை​பெற்ற நிகழ்​வில், தமிழகம் முழு​வதும் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்​னணு ரேஷன் அட்​டைகள் வழங்​கும் திட்​டத்தை தொடங்கி வைத்​தார்.
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சென்னை பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டு, இரண்​டிலும் வெற்றி பெற்ற தவெக தலை​வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார். இதைத் தொடர்ந்து முதல்​வ​ராகப் பதவி​யேற்​றார். கடந்த ஜூன் 1-ம் தேதி திருச்​சிக்கு சென்​று, தொகுதி வாக்​காளர்​களுக்கு நன்றி தெரி​வித்​தார்.
இந்​நிலை​யில், தான் போட்​டி​யிட்டு வென்ற சென்னை பெரம்​பூர் தொகு​திக்கு நேற்று முதல்​முறை​யாக சென்​றார். தொகுதி மக்​கள் அவருக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். வியாசர்​பாடி சர்மா நகர் முதல் பிர​தான சாலை​யில் புதுப்​பிக்​கப்​பட்​டுள்ள பெரம்​பூர் எம்​எல்ஏ அலு​வல​கம் மற்​றும் அங்கு புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள இ-சேவை மையம் ஆகிய​வற்றை முதல்​வர் விஜய் திறந்து வைத்து பார்​வை​யிட்​டார். எம்​எல்ஏ அலு​வல​கத்​தில் மாற்​றுத் திற​னாளி​கள் எளி​தாக வந்து செல்​லும் வகை​யில் சாய்தள வசதி, அவர்​களுக்​கான சக்கர நாற்​காலிகள் உள்​ளிட்ட பல்​வேறு வசதி​கள் செய்யப்பட்டுள்ளன.
இ-சேவை மையத்​தில் சான்​றிதழ் உள்​ளிட்ட பல்​வேறு சேவை​களுக்​காக விண்​ணப்​பிக்க வந்த மக்​களிடம் முதல்​வர் கலந்​துரை​யாடி​னார். விண்​ணப்​பித்த 5 பேருக்கு உரிய சான்​றிதழ்​களை உடனடி​யாக வழங்​கி​னார்.
ரூ.3 கோடியில் திட்டங்கள்: எம்​எல்ஏ தொகுதி மேம்​பாட்​டுத் திட்​டத்​தின்​கீழ் ரூ.3 கோடி மதிப்​பீட்​டில் பெரம்​பூர் தொகு​தி​யில் பல்​வேறு வளர்ச்​சித் திட்​டப் பணி​களை மேற்​கொள்​வதற்​கான தனது பரிந்​துரைக் கடிதத்தை மாநக​ராட்சி ஆணை​யரிடம் வழங்​கி​னார். தொடர்ந்​து, பெரம்​பூர் தொகு​திக்கு உட்​பட்ட எம்​கேபி நகர் சிந்​தாமணி கூட்​டுறவு நியாய​விலைக் கடையைப் பார்​வை​யிட்​டார்.
தமிழகம் முழு​வதும் ரேஷன் அட்டை கோரி விண்​ணப்​பித்​தவர்​களில் 73 ஆயிரம் குடும்பங்களுக்கு புதிய மின்​னணு ரேஷன் அட்​டைகள் வழங்​கும் திட்​டத்தை தொடங்கி வைத்​தார். இதன் ஒரு பகு​தி​யாக, பெரம்​பூர் தொகு​தி​யைச் சேர்ந்த 50 குடும்​பங்​களுக்குபுதிய ரேஷன் அட்​டைகளை வழங்​கி​னார். அட்​டை​தா​ரர்​களுக்கு அரிசி மற்​றும் இதர உணவுப் பொருட்​களையும் வழங்​கி​னார்.
திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததை அடுத்து, மாவட்​டங்​களுக்​குரிய ஒப்​புதல் அளிக்​கப்​பட்ட புதிய ரேஷன் அட்​டைகளை அந்​தந்த மாவட்​டங்​களில் உடனடி​யாக வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.வியாசர்​பாடி​யில் ரூ.47.50 கோடி​யில் செயல்​பட்​டு​வரும் மாநகர் போக்​கு​வரத்​துக் கழகமின்​சா​ரப் பேருந்து பணிமனையையும் முதல்வர் பார்​வை​யிட்​டார். பேருந்​துகளுக்கு எவ்​வாறு சார்ஜ் ஏற்​றப்​படு​கிறது என்​ப​தை​யும் பார்​வை​யிட்​டு, அதுகுறித்து கேட்​டறிந்​தார்.
முதல்​வர் அறி​வுறுத்​தலின்​படி மாநகர் போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில், இனிவரும் காலங்​களில் குளிர்​சாதன வசதியுடன் கூடிய தாழ்தள மின்​சா​ரப் பேருந்​துகள் கொள்​முதல் செய்யப்​பட்டுபயணி​களின் வசதிக்​காக இயக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த நிகழ்​வு​களில், அமைச்​சர்​கள் செங்​கோட்​டையன், ஆதவ் அர்​ஜு​னா, வெங்​கடரமணன், விஜய் தமிழன் பார்த்​திபன், காந்​தி​ராஜ், குமார், எம்​எல்​ஏக்​கள், நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி, போக்​கு​வரத்து துறைச் செயலர் வள்​ளலார், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்​குநர் ஆனந்த், சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் சமீரன், மாவட்ட ஆட்​சி​யர் மாலதி ஹெலன், மாநகர்​ போக்​கு​வரத்​துக்​ கழக மேலாண்​மை இயக்​குநர்​ மோகன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.